தமிழ் கேடிஈ திட்டம்
- மொழிபெயர்ப்பாளர்களுக்கு
- முக்கிய நிகழ்வுகள்
- தமிழ் கேடிஈ அணி
- கேடிஈ 3.2 இல் தமிழ் மொழிபெயர்ப்புப் புள்ளிவிபரம்
தமிழ் கேடிஈ இடைமுகத்தை நொப்பிக்ஸ் கொண்டு சோதித்துப் பார்க்க உங்களை வரவேற்கிறோம். நொப்பிக்ஸ் தமிழை இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு...
தமிழ் கேடிஈ திட்டத்திற்குப் பங்களிக்க விரும்புகிறீர்களா? முதலில் பிரபு ஆனந்த் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்புக் கையேட்டினை இனை வாசியுங்கள். கேடிஈ மொழிபெயர்ப்புக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதியைப் பயன்படுத்துகிறோம். அதனை இறக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து, மொழிபெயர்க்க உதவும் கருவியொன்றை நிறுவிக் கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்புக்கு உதவும் கருவிகளிற் சில:
- கே பேபல் (KBabel): லினக்ஸில் மட்டும்
- போ எடிட் (poedit): லினக்ஸ்/வின்டோஸ்
- போ டிரான்ஸ்லேட்டர் (potranslator): வின்டோஸில் மட்டும்
கேடிஈ 3.2 பதிப்பிலிருந்து, கேடிஈ தமிழ் மொழிபெயர்ப்புக்கள் தமிழ் குறியீட்டுத் தரம் (TSCII) இலிருந்து யூனிக்கோட் குறியீட்டு முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக்கள் தமிழ் யூனிக்கோட்டில் இருப்பதால் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு, விசைப்பலகை என்பவற்றையும் நிறுவ வேண்டும். எழுத்துருக்களையும், விசைப்பலகையையும் தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எந்த நிரல்களுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது எனும் விபரத்தை கேடிஈ மொழிபெயர்ப்புப் புள்ளிவிபரத் தளத்தில் பாருங்கள். இவற்றில் எந்த நிரலை தமிழ்ப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்து, தமிழ் கேடிஈ ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் (t_vasee at yahoo dot com) அனுப்புங்கள். கேடிஈ மட்டுமல்லாமல் பிற தமிழினிக்ஸ் முயற்சிகளிலும் கலந்து கொள்ள தமிழினிக்ஸ் யாஹூ குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
முக்கிய நிகழ்வுகள்
கேடிஈ இடைமுகத்தை தமிழ்ப்படுத்தும் முயற்சி 2000-ஆண்டு பெப்ரவரி மாதம் சிவகுமார் சண்முகசுந்தரத்தால் தொடக்கப்பட்டது. இது தொடர்பாக kde-i18n-doc மடற்குழுவிற்கு சிவகுமார் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே காணலாம். அடுத்த சில வாரங்களில் அவரின் மொழிபெயர்ப்புகளை தனது கணினியில் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது பற்றி kde-i18n-doc இற்கு வசீகரன் மின்னஞ்சல் அனுப்பினார்.
சிவகுமார் சண்முகசுந்தரம், கோமதி சிவகுமார் ஆகியோரின் கடும் உழைப்பின் பயனாக 2000-ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த கேடிஈ 2.0 பதிப்பில் தமிழ் உத்தியோகபூர்வமாக இடம் பெற்றது; கேடிஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி எனும் பெருமையையும் பெற்றது. கேடிஈ இனைத் தமிழ்மயப்படுத்தும் இம்முயற்சிக்கு தகுதரம் (TSCII), நாகு சின்னசாமியின் அகரம் செயலி, எழுத்துரு என்பவை அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கேடிஈ 2.0 இடைமுகம் பற்றி சிவகுமார், கோமதி தமிழினிக்ஸ் மடற்குழுவில் குறிப்பு அனுப்பினர்.
ஆரம்பத்தில் கேடிஈ இல் தமிழ் உள்ளிடுவதற்கு அகரம் செயலியில் தட்டி, கேடிஈ நிரல்களில் வெட்டி ஒட்டினோம். பின்னர், KIKBD, XKB எனும் உள்ளீட்டு முறைகளுக்குரிய தமிழ் விசைப்பலகைளை சிவகுமாரும், வசீகரனும் உருவாக்கினோம். ஆரம்பகால கேடிஈ முயற்சிகள் பற்றிய வலைத்தளம் ஒன்றில் இவை இடம் பெற்றன. பின்னர், தினேஷ் நடராஜா உருவாக்கிய tamilxkb செயலியால் பல்வேறு விசைப்பலகை முறைகளில் இலகுவாக தமிழை உள்ளிட முடிந்தது.
இவ்வாறு தொடங்கிய தமிழ் கேடிஈ முயற்சி, தமிழினிக்ஸ் மடற்குழு வாயிலாகவும் நேரடியாகவும் இணைந்து கொண்ட உலகளாவிய தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாகத் தொடந்து வருகிறது.
- 2000 ஜூலை: தமிழ்நாடு அரசின் தகவல் தொழிநுட்ப காரியக் குழுவிற்கு தமிழ் லினக்ஸ் ஆர்வலர்கள் சார்பாக தயாரித்து வழங்கப்பட்ட அறிக்கையில் தமிழ் கேடிஈ முயற்சியின் ஆரம்பம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- 2001 ஆகஸ்ட்: மலேசியா தமிழிணைய மாநாட்டில், தமிழ் லினக்ஸ் பற்றி D. சிவராஜ் அளித்த அறிக்கையில் கேடிஈ 2.2 பதிப்பில் தமிழ் தொடர்ந்து இடம் பெற்று வருவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
- 2002 செப்டெம்பர்: சான்பிரான்சிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் தமிழ் கேடிஈ இடைமுகத்தை நொப்பிக்ஸ்-தமிழ் குறுவட்டு மூலம் அறிமுகப்படுத்தினோம். இக்குறுவட்டு மூலம் லினக்ஸை கணினியில் நிறுவாமலே பயன்படுத்தமுடியும். கனடா, டொரொன்டோ இமாஜின்டெக் நிறுவனத்தின் ஆதரவின் மூலம் மாநாட்டில் 150 குறுவட்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. சிவராஜ், வெங்கட், அன்புமணி, வசீகரன் ஆகியோர் நொப்பிக்ஸ் குறுவட்டை மடிக்கணினிகளில் ஏற்றி மாநாட்டு விருந்தினர்களுக்கு கேடிஈ தமிழ் இடைமுகத்தை இயக்கிக் காட்டினர்.
- 2002 அக்டோபர்: பிரபு ஆனந்தின் தனிமுயற்சியால் மான்டிரேக் லினக்ஸ் தமிழ் கேடிஈ இடைமுகத்துடன் வெளிவந்தது. ஒரு பிரபல லினக்ஸ் தொகுப்பு தமிழ் ஆதரவுடன் வெளிவந்தது இதுவே முதன்முறையாகும். இந்நிகழ்வை குறிக்கும் வண்ணம் அக்டோபர் 2002-இல் வெளிவந்த தென்றல் இதழ் அட்டைப்படத்தில் தமிழ் கேடிஈ இடைமுகத்தைப் பிரசுரித்தது. தமிழ் மான்டிரேக் பற்றி வெங்கட் எழுதிய கட்டுரையும் அவ்விதழில் வெளிவந்தது.
- 2003 ஜூலை: கேடிஈ இற்கு அடிப்படையான க்யூடி (Qt) தொகுப்பின் 3.2 ஆவது பதிப்பு தமிழ் யூனிக்கோட் குறியீட்டு முறைக்கு ஆதரவுடன் வெளிவந்தது. மொழிபெயர்ப்புக்கள் தகுதரத்திலிருந்து யூனிக்கோடிற்கு மாறுவதற்கு இது வழிவகுத்தது.
- 2004 ஜனவரி: ழா கணினி குழுவினரின் பங்களிப்புடன் தமிழ் கேடிஈ 3.2 பதிப்பு யூனிக்கோட் குறியீட்டு முறையில் வெளிவருகிறது.
தமிழ் கேடிஈ அணி
- சிவகுமார் சண்முகசுந்தரம் (கடந்தகால ஒருங்கிணைப்பாளர்)
- கோமதி சிவகுமார்
- அன்புமணி சுப்ரமணியன்
- D. சிவராஜ்
- தினேஷ் நடராஜா
- வெங்கட் வெங்கட்ரமணன்
- ரமேஷ் துரைசுவாமி
- M. K. சரவணன்
- பா. மணிமாறன்
- து. சத்யன்
- பிரபு ஆனந்த்
- மா. சிவகுமார்
- ரமணி அருணாசலம்
- தியாகராஜன் லெக்ஷ்மணன்
- ழா கணினி குழு
- துரையப்பா வசீகரன் (ஒருங்கிணைப்பாளர்)